வரிகள்: இஸ்ஸத் இஷாரா M. T
இருள் மாறிய வானில்
காதல் பாடும் வெண்ணிலவே !- உன்னை
கையோடு அள்ளி நெஞ்சோடு அணைத்திடவே
எண்ணம் எங்கும் தோண்றுதடி
பெண்ணென்று சொல்லிடிலும்
உன் வண்ணத்தில் தோன்றிட முடிந்திடவே கூடிடுமோ?
கருங்கூந்தல் மேகமாய்
உந்தன் உலாவதும் உள்ளதடி
மூடிவைத்த முகமதிலே
முத்தமிட நினைக்கயிலும்
எட்டிவிடா உன் தூரத்தை தொட்டுவிட எங்குதடி
யாவும் காற்பனயாய் போகுத்தடி
தொட்டுவிட உன்னை
பரிதவிக்கும் என்னை
பரிதாபமாய் பார்த்து
பரிகாசம் செய்யுதடி - உன்னருக்கே தூவிவிட்ட விண்மீன்கள்
கோடி அழகை கொட்டிவிட்ட
தேவதையாய் உன்னை
நெருங்கிவிட முடிந்திடின் நினைத்தபடி ஆட்கொள்வேனடி- நிலாப்பெண்ணே.....
இஸ்ஸத் இஷாரா M. T
Social Plugin