(கவிதை)

      By :- Arshad Ahamad 
               
                   
                                     ***

      எதுகையும் மோனையும் 
      கலந்தது தான் கவிதை
      என் கவிதைகளில் அவற்றின் வாடைகூட படவில்லை

      மேடும் பள்ளமும் 
      கலந்தது வாழ்க்கை
      பள்ளங்களாகவே தொடர்கிறது என் வாழ்க்கை

      கற்களாலும் முற்களாலும் 
      அர்ச்சிக்கப்பட்ட பாதையில் தான் 
      தொடர்கிறது என் பயணம்

      இன்னும் பலர் 
      கற்களையும் முற்களையும் 
      ஏன்... குப்பியோடுகளையும் கூட 
      என் பாதையில் எறிகின்றனர்

      மெதுவான என் கால்களால் 
      அவற்றை மிதிக்கப் பயப்படுகிறேன்
      நான்
      அதனால் தான் என் கால்களை கறடாக்கினேன்

      அது தவறென நீங்கள் நினைத்தால் 
      நான் என்ன செய்வது...???

      வழி நெடுகிலும் 
      பல நூறு ரோஜாச் செடிகள் 
      வண்ணவண்ணமாய் 
      பூத்துக் கிடக்கின்றன

      ஆனாலும் துரதிஷ்டம்!!!
      அவற்றைச் சுற்றிலும் முற்களல்லவா...

      மெதுவான என் கைகளால் 
      அந்த முற்களைப் பிடிக்க பயமாயிருந்தது
      அதனால் தான் என் கைகளை கறடாக்கினேன்

      இது தவறென நீங்கள் நினைத்தால் 
      நான் என்ன செய்வது...???

      ***************************************

      இன்பமும் துன்பமும் 
      நிறைந்நது தான் வாழ்க்கை

      துன்பங்களாகவே தினமும் 
      தொடர்கிறது என் வாழ்க்கை

      வழி நெடுகிலும் வேசதாரிகள் பலர் 
      நெருங்கி உறவாடுகின்றனர்
      இன்முகங்கொண்டு பேசுகின்றனர்

      தேவை முடிந்ததும் தான்
      சுயரூபங்களைக் காட்டி 
      மனதைக் காயப்படுத்தி மறைகின்றனர்

      இளகிய மனம் என்னது என 
      அவர்களுக்கு காட்டிடப் பயப்படுகிறேன் 
      அதனால் தான் என் மனதைக் கல்லாக்கினேன் 

      அது தவறென நீங்கள் நினைத்தால் 
      நான் என்ன செய்வது...???

      அழகிய என் வார்த்தைகள் தான் 
      இளகிய என் மனதைக் காட்டுகிறது

      அழகிய வார்த்தைகள் கொண்டு 
      உறையாடப் பயப்படுகிறேன்
      அதனால் தான் என் வார்த்தைகளை 
      காறார் ஆக்கினேன் 

      இது தவறென நீங்கள் நினைத்தால் 
      நான் என்ன செய்வது...???

      உங்களைப்போல் என்னால் மாற முடியாது
      உங்களுக்காய் என் கொள்கைகளையும் மாற்ற முடியாது

      நீங்கள் நீங்களாயிருங்கள்
      நான் நானாகவே இருக்கிறேன்

      என்னைப் பார்த்து நீங்கள் வருந்தவும் வேண்டாம்
      என்னைப் பார்த்து நீங்கள் சிரிக்கவும் வேண்டாம்

      நீங்கள் வருந்தினாலோ சிரித்தாலோ 
      நான் சந்தோசப்படப் போவதுமில்லை 
      வருத்தப்படப் போவதுமில்லை

      இது எனக்கென நானே அமைத்த நியதிகள்

      என் நியதிகளுடனேயே 
      என் பாதையில் 
      என்னால் பயணிக்க முடிகிறது

      இது...
      எனக்கான பயணம்
      எனக்கான பாதை
      ஆனால் 
      என் நியதி....


      Arshad