உங்களுக்கு விருப்பமற்ற எதையும்
யாருக்காகவும்
செய்கிறேன் என்று வாக்களிக்காதீர்கள்
ஏனெனில்
மனம் விரும்பாத எதையும்
ஒருபோதும் உங்களால் சரியாகச் செய்யமுடியாது
அப்போது
உங்களை நம்பியவர் நிச்சியமாக ஏமாற்றமடைவார்...
நீங்கள் விரும்பாததை ஒருவர் பேசும் போது
அவரிடமே அதை நிறுத்தச் சொல்லிவிடுங்கள்
அதைவிடுத்து, அவரை அலட்சியம் செய்யாதீர்கள்
ஏனெனில்
உங்களின் அலட்சியம் அவரை நிச்சயமாக காயப்படுத்திவிடும்...
உங்களை நேசிப்பவர்களிடம்
உங்கள் மனதிலுள்ளவற்றை வெளிப்படையாகக் கூறி விடுங்கள்
இல்லையெனில்
புரிதல்கள் தவறாகிவிடவும் வாய்ப்புக்கள் உண்டு..
முரண்பாடுகள் வரும்போது முதலில் உங்களின் பிழை என்னவென்று பாருங்கள்
ஏனெனில்
தன்னில் பிழை காண்பது இங்கு யாருக்கும் விருப்பமில்லை
அதனாலே
முற்றுப்புள்ளிகளின்றித் தொடர்கின்றன முறன்பாடுகள்...
உங்களை அலட்சியம் செய்பவர்களிடம் நெருங்கிப் பழக முயற்சிக்காதீர்கள்
அவர்களின் தேவைக்கதிகமாய் அவர்களோடு இருக்க நினைத்தால் அது அவர்களுக்குத் தொந்தரவாகிவிடும்
இங்கு ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென சில எல்லைகள் உண்டு
அதற்குள் நாம் நுழையாமல் இருக்கும் வரை தான்
அவர்களுக்கும் நமக்குமான உறவு சுமுகமாய் இருக்கும்...
இல்லையெனில்
உங்களையரியாமலே உங்கள் உறவுக்குள்
பிளவுகள் தோன்றிவிடும்..
-Arshad
Social Plugin