கவிதை
By :- Mohamed fazil
நல்லவன் சோதிக்கப்பட்டும்
கெட்டவன் தண்டிக்கப்பட
விழிகள் விழிப்பினும்
விளக்கம் புரியா கடவுளை
மூடிய விழிகளால்
வழிபட பணிகிறோம்.
படைத்தவன் மாந்திரிகனில்லை.
அவன் படைத்த எதிலும் மந்திரமில்லை.
அவன் நிலைக்க படைப்புகள் தேவையில்லை
படைப்புகள் நிலைக்க அவனின்றி வேறுவழிகள் இல்லை.
அற்புதம் செய்பவன்
அறிவை படைப்பதில்லை.
அறிவை படைத்தது
துதிப்பதற்கு மட்டுமில்லை.
தேடலை விரும்பும்
தேடல் அவன்.
தேடுபவர் மனதில்
குடிகொள்பவன் அவன்
துதிப்பது மட்டும் தேவை என்றால்
இரவும் பகலும் படைத்தது ஏன்?
துதிப்பதால் முயற்சிகள் தோற்குமெனில்
கடவுளின் ஆட்சியில் நியாயமில்லை.
படைப்புகள் மிகைக்க
பல இருந்தும்
படைத்தவன் பெயரால்
பகை வளர்த்தோம்.
படைத்தவனையும் படைத்தனாய்
படைத்தவன் பெயரால் பயம் புகட்டி
பயங்கரம் செய்பவன்
படைத்தவன் முன் - வாய் அடைத்தவனாய்
வதம் செய்யப்படுவதை அறிவீரோ?
-Fazil
Social Plugin