(கவிதை)
By:- ஹுஸ்னியா பாரூக்



                              ********************
      

பட்டாம்பூச்சிகள்
பேசிக்கொண்டன 
ஆச்சரியமாக...

அழகைக் கொட்டிக்கொண்டு 
மனிதப் பூங்கொத்து ஒன்று
பரிமளம் வீசுவதைக் கண்டு
தமது பரீட்சியமான 
நந்தவனத்தில் 
வித்தியாசமாக....

பக்கத்தில் இருந்த 
மலர்களெல்லாம்
கண்ணாடி தேடின
தமது வனப்பில்
சந்தேகப்பட்டு...

அழகிய குழந்தைகள் 
அல்லாஹ்வின் அற்புதமன்றி
வேறில்லை என்று
சிலாகித்துக் கொண்டு
சிறகடித்துப் புன்னகைத்தன...

இதைப்படைத்த இறைவனுக்கு
நன்றி சொல்லி
புகழ்பாட ஒரு கவிதை கேட்க
என்னிடம் வந்தன...
 
சட்டென மொழிந்தேன் 
ஒரே வரியில் 
' அல்ஹம்துலில்லாஹ்'


ஹுஸ்னியா பாரூக்