By :- Afkar Ahamed
அலையோடு போராடி
உயிர்தப்பி கரை திரும்பும் மீனவன்
வீடு திரும்புவது வெறுங்கையுடன்
நீரோடு வியர்வை கலந்து
கட்டிடம் கட்டும் தொழிலாளி
படுத்துறங்குவது ஓலைக்குடிசையில்
ஆடம்பர தெருக்களில்
ஆதாயம் தேடும் குப்பைக்காரி
வசிப்பதோ குப்பை மேட்டில்
பிறர் வயிறு வளர்க்க
களத்து மேட்டில் பயிர்வளர்க்கும் விவசாயி
கண்ணயர்வது ஒருவேளை சாப்பாட்டுடன்
உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைப்பதிங்கு
கடவுளுக்கு மட்டும் தான்!!
Afkar

Social Plugin