(கவிதை)
By:- Safrin lafeer
(Potuvil)
ஒவ்வொரு மனிதனும்
அடங்காத அபிமானத்தோட
சேகரிக்க வேண்டியதும் இதுதான்!
பாதங்களுக்கு கீழே
மொய்த்துக்கிடக்கும் முட்களை
தகர்த்து எரிவதும் இதுதான்!
தேடிவந்து ஒட்டிக் கொள்ளும்
துன்பங்களை துடைத்துச் செல்லும்
உற்ற நண்பனும் இதுதான்!
அச்சத்தின் அஸ்த்திவாரத்தை
தடம் இன்றி போக்குவதும் இதுதான்!
மகிழ்ச்சி எனும் வலையை
நெய்யக்கூடிய
சிலந்தியும் இதுதான்!
சிதறிய சிந்தனைகளை
சிதைக்காமல்
ஒன்று சேர்ப்பதுவும் இதுதான்!
கூட்டுப்புழுவாய் துவண்டவரை வண்ணாத்தியாய் உருமாற்றுவதும்
இதுதான்!
துயரங்களை ஜீரணித்து
மாற்றங்களை
பிரசவிப்பதுவும் இதுதான்!
நசுங்கிய உள்ளங்களில்
நம்பிக்கை நாற்றுக்களை
நடுவதுவும் இதுதான்..!
இத்தனைக்கும் மனிதா
உன் மனதில்
பதியம் போட வேண்டும்
மனவலிமை எனும் விதயை.... !
இது கிழிக்கும் கோட்டு வழி
செல்வதுதான்
வெற்றியின் கதவை
ஓங்கித்திறக்கும் ஒரே வழி..!
-FATHIMA SAFRIN LAFEER
Social Plugin