(கவிதை)
By:- இஸ்ஸத் இஷாரா




உன்னை காணும் நொடிகளில்
என் உதடுகள் புன்னகையில்
திளைப்பதும்
உன் பார்வை என்னை தொடும் வேளையில் வெட்கிச்சிவந்து போகிற என் கன்னங்களும்

நீ பாராத நேரத்தில் 
உன்னை மட்டுமே பார்க்கிற என் கண்கள்
உன்னை காணாத நொடிகளில் 
எங்கித்தவிப்பது ஏனடா ?

உன் பேர்கேட்கும் நேரமெல்லாம்
சட்டென்று தேடும் தேடல்களும்
நீ இல்லாது போகையில் 
தவித்துப்போகிறதை  நீ அறிவாயா ?

ஒருவார்த்தை என்னிடம் நீ பேசினாலும் 
அதை ஓராயிரம் முறையேனும் 
எண்ணிப்பார்க்கும் என் நினைவுகளை 
எங்கனம் புரிந்து கொள்வாய்?

என்னவன் நீயென எண்ணி
என் உறக்கம் தொலைத்த நானும் 
ஊமை தானடா 
உன்னிடம் தோற்றுப்போகிறேன்
என் காதலை சொல்லிட எண்ணி...


-இஸ்ஸத் இஷாரா-