(கவிதை)
By: izzath ishara 



மௌனமதுவும் 
மந்திரமாய் போகலாம் 
ஊடல் கொள்ளும் வேளையில்...

சிறு பார்வை கூட 
மௌனத்தை கலைத்து விடலாம் 
காதல் கொள்ளும் வேளையில்...

சிறு தீண்டலும் 
சில்லெனத்தொட்டு விடலாம் 
உயிர் நாடியை

காவியம் தேடும் காதல் எல்லாம்
பார்வை ஒன்றிலே தோன்றியது தான்
பரவசப்புன்னகை வருவதெல்லாம்
தலைவனை காணும் நொடிகளில் தான்

முள்ளெனக்கண்டும் 
மோகம் கொள்வதெல்லாம்
அவள் மீட்டும் சிறு புன்னகையினாலேயே

சொல்லாக்காதலும் 
துளிர் விடும் அரும்பென
மங்கையவள் பார்வையிலே 
சில்லெனப்போவதெல்லாம் 
அவன் கொள்ளும் நாணத்தை 
ஒருகணம் ரசித்திடவே
அவள் போடும் வேஷங்களாய் போவதும்
இக்காதல் செய்யும் மாயை தானோ?

முட்டிமோதி அவிழ்த்துவிட்ட போதிலும்
அவள் நாணமாய் சிரித்திட 
ஒரு நொடி 
அவன் படும் அவஸ்தயும் 
ஒரு வகை இன்பம் தானே- அவள் சரியென்ற ஒற்றைச்சொல்லவிழ்க்கும் வரை...


-இஸ்ஸத் இஷாரா