(கவிதை)
By:- fathima safrin lafeer
( Potuvil )
பூமி பற்றியுள்ள குடை
எப்போதோ எரிந்திருக்கும்....
இலை பச்சைக்கம்பளம்
விரிக்காமலிருந்துதிருந்தால்!
மனிதன் எனும் ஆணவக்கயிறு
எப்போதோ அறுந்திருக்கும்....
இலை தனது பசுமை எனும் வாலை
சுருட்டியிருந்தால்!
உயிரினங்கள் எப்போதோ
மண்ணோடு கலந்திருக்கும்....
இலை, தனது ஒட்சிசனை
சிறையிலிட்டுருந்தால்!
பறவைகளின் அடைக்களம்
எப்போதோ செத்திருக்கும்....
இலை, தன்னை கூடு என
மொழிபெயர்காமல் இருந்திருந்தால் !
நிழல் எனும் சொல்லை
அறியாமலே போயிருக்கும்
இவ்வலகம் - இலை
சூரியனின் கிரணங்கள்
இழைப்பாற இடமளிக்காமலிருந்திருந்தால்!
மனிதா
உன் கஷ்டத்தின் முற்றத்தில்
வானமே வசித்திருக்கும்....
இலை, உதிரும் காலம் அறிந்திருந்தும்
தன்னம்பிக்கைப் பாடம்
புகட்டாமலிருந்திருந்தால்!
பூலோகம் எப்போதோ
வரட்சியின் சாட்டையால் தோலுரிக்கப்பட்டிருக்கும்.....
இலை, ஆதரவாய் சில மழைத்துளிகளுக்கு
தீர்மானம் எடுக்காமலிருந்திருந்தால்!
சில உயிரினங்கள்
வாழ்க்கையை சாவின்
யன்னலின் வழியே தரிசித்திருக்கும்..
இலை, உணவு எனும் ஊசி வழியே
ரத்ததானம் வழங்காமலிருந்திருந்தால்!
-FATHIMA SAFRIN LAFEER
POTTUVIL
Social Plugin