(கவிதை)
By:- Afkar Ahamad
கலியுகமிது
கலப்படமில்லா எதுவும் செல்லாது...
தங்கத்தோடு செப்பும் கலந்திடவே
நகையாகிறது
இரும்போடு கனிமம் கலந்திடவே
உருக்காகிறது
களியோடு நீரும் கலந்திடவே
மனையாகிறது
உப்போடு அயடீன் கலந்திடவே
உணவாகிறது
மொழியோடு தாளம் கலந்திடவே
பாடலாகிறது
மெய்யோடு பொய்யும் கலந்திடவே
கவியாகிறது
காதலோடு காமம் கலந்திடவே
உயிராகிறது
தூயவை மதிப்படையும்
அது தூய்மை இழந்த பின்
காரணம் கலியுகமிது...
Afkar Ahamad
Social Plugin