(கவிதை)
By:-  இஸ்ஸத் இஷாரா



மெல்லினம் கொண்டதோர் இடை தேடி

ஓய்வில்லாத்தேடல் சுமந்து திரிகின்ற 
காதலன் ஆகினேன்

தேடும் தேடல் எல்லாம் 
மங்கை அவள் 
மை விழி கண்டிட

தேன் சொட்டும் இதழிடை 
இணைந்திடவே...
தேவதயவள் தேன் மொழி கேட்டு 
மதி மயங்கிய கள்வனாய்

அவள் வெட்கிச்சிவந்திட 
நித்தம் ரசித்திடும் நொடிகளில் திழைத்திட
துடித்திடும் காளையாகிப்பபோவேனோ!

என்னவள் சிந்திடும் கண்ணீர் துளிகளை 
முத்தாக்கிட மாட்டேனா!

அவள் மேனியில் தவழ்ந்தோடும் 
மென்நூலாடையாகி 
அவளை சேர்ந்திட மாட்டேனா!

கார்க்கூந்தால் சேர்ந்திடும் 
மலர்க்கொத்தாய் மாறிடேனோ!

அவள் மௌனப்புன்னகையில் 
மதிமயங்கிடேனோ!

தேடுகிறேனடி உன்னை - என் 
கனாக்களிலும் கூட 
காரிகையே
என் கைசேர்ந்திடடி...!!! 



 -இஸ்ஸத் இஷாரா-