Ad Code

Responsive Advertisement

விதி....!

(கவிதை)
By: இஸ்ஸத் இஷாரா




தீராத காயங்கள் ஆயிரம் ஆயிரம்
சொல்லிதீர்த்திட ஆசையுமில்லை
அலையில்லாக்கடல் போலே
மௌனத்தின் மடியில் என் வார்த்தைகள்

தனிமையின் தாகங்களில் 
தோன்றிடும் 
அரவணைப்புக்களின் ஆசை
தீர்ந்திடாத கதைகள் பல சொல்லும்
என் கட்டில் தலையணைகள்

வயதென்ற ஒன்று 
வரையறையின்றி 
வளர்ந்தே போகிறது 
என் அனுமதியின்றி
வல்லூறுக்கண்ணில் மாட்டிய கோழிக்குஞ்சினதுதான் இந்நிலை

தேவைகள் ஏராளம் 
ஆசைகள் நூறாயிரம்
இருந்தும் மௌனச்சிரிப்புதான் என் விதி
சில பேரை; சில வாய்களை மூடிட
மௌனமாய் புன்னகைத்து விடுவதுதான் வழி இங்கு...!!!



 :இஸ்ஸத் இஷாரா: