தேய்ந்து தேய்ந்து தேடும்

நின் தேடல்தான் என்னவோ

வான் நிலவே...??
காதலது தேடலென்றால்
கானகத்தில் தேடிப்பார்...
நாட்டுக்குள் தேடாதே
அங்கெல்லாம்
நான் தேடிப் பார்த்துவிட்டேன்...
அங்கே...
நாகரீக யந்திரங்களின்
நாடகங்கள் தான்
அரங்கேறிக்கொண்டிருக்கின்றன...

-Arshad