Ad Code

Responsive Advertisement

கண்ணழகி...




கண்கள் எனும் பெயரில்

ஆணின் மனதை ஆளும்

கொடுங்கோலினி உன்னால்!


விழிகளா விலங்குகளா? 

விளங்குவதில் தோற்றுப்போனேன்.

விலங்குகளும் தேவர் ஆகும் 

முக்தி தரும் வேதம் கண்டேன்.


கருவிழியின் சுழற்சியை

காணா வரையில்

கோள்கள் யாவும் - அனலியை

வலம்வரும் என்பேன். 


உன் விழிகளிலில் குடியேற்றம்

நிகழா வரையில்

அறிவியல் வளர்ச்சியில் 

மந்தம் காண்பேன்.


காந்தம் புலம் 

காதல் கொள்ளும்

ஈர்க்கும் விசை உன் விழிகள்...

ஒற்றை பார்வையில்

உரையச்செய்யும்

உஷ்ணம் தரும்  பனி மலர்கள்...


பிறவிப்பலனை அடைவேன்

ஒருமுறை  

உன்கண் முன் நின் தொழவே!

பிறப்பும் இறப்பும் 

இமைக்கும் நொடியில் 

மீண்டே மீண்டும் 

உயிர்த்தெழுவென். 



-பாசில்